Site icon அநேகன்

தங்கும் விடுதிகள் மீண்டும் இயங்க மித்தியிடம் விண்ணப்பிக்க வேண்டும் !

கோலாலம்பூர் | ஜூன் 6 :-

தங்கும் விடுதிகள் மீண்டும் வழக்கம் போல் இயங்க அனைத்துலக வாணிபம், தொழில்துறாஇ அமைச்சின் கீழ் உள்ள Covid-19 Intelligent Management System (CIMS) 3.0 இணையப்பக்கத்தின் வழி மீண்டும் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவு நாளை தொடங்கி ஜூன் 14 ஆம் நாள் வரை நடப்பில் இருக்கும்.

தனிமைப்படுத்தல், சேவைத் தொடர்பான வேலை போன்ற விவகாரங்களுக்கு தங்கும் விடுதிகள் இயங்குவது குறித்து மேற்குறிப்பிட்ட அமைச்சின் இணையப்பக்கத்தில் தான் மேற்கொள்ளப்படும் என சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு கூறியுள்ளது.

இம்முடிவு நேற்று தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் வணிகப் பதிவுச் சான்றிதழ், வணிகத் தளம் இயங்க அனுமதிக்கப்படும் ஊராட்சி மன்றத்தின் கடிதம்  ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

இதற்குன் முன்னர் சுற்றுலாத்துறை வெளியிட்ட அனுமதிக் கடிதம் நேற்று நள்ளிரவோடு காலாவதியாகிறது. அதனைத் தொடர்ந்து மறு நாள் மித்தியின் அனுமதிக் கடிதமே பயன்படுத்தப்படும். ‘

எனவே, தங்கும் விடுதி தொழில்துறை சார்ந்தவர்கள் notification.miti.gov.my இணையப்பக்கத்தில் மீண்டும் பதிந்து கொண்டு முறையான அனுமதிக் கடிதத்தைப் பயன்படுத்த சுற்றுலாத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version