Site icon அநேகன்

சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கை சீராக இல்லை ! – மாநில சுல்தான் அதிர்ச்சி

ஷா ஆலாம் | ஜூன் 8 :-

சிலாங்கூர் மாநில மக்களுக்கு வெறும் 615,210 தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளது குறித்து அறிந்த சிலாங்கூர் சுல்தான் பேரதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார். முன்னதாகக் கூறப்பட்டது போல் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.

சிலாங்கூர் சுல்தானின் இரகசிய செயலாளர் முகம்மட் முனிர் பானி இது குறித்து வெளியிட்டத் தகவலில், சிலாங்கூர் மக்கள் தொகைக்கும் வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளுக்கும் நியாயமானதாக இல்லை என சுல்தான் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 1 ஆம் நாள் வரையில், 615,210 தடுப்பூசிகல் மட்டுமே சிலாங்கூர் மக்களுக்கு வழங்கியிருக்கும் விவரம் கோவிட்-19 தடுப்பூசி திட்ட செயற்குழு CITF வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்திருப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சிலாங்கூர் சுல்தான் கூறியுள்ளார்.

மாநிலததில் ஏறத்தாழ 6.5 மில்லியன் மக்கள் தொகை இருக்கின்ற வேளையில், வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசி எண்ணிக்கை போதுமானதாகவும் நியாயமானதாகவும் இல்லை.

நாட்டின் உற்பத்தித் துறையில் சிலாங்கூர் மாநிலம் மிகப் பெரிய பங்கினை தொடர்ந்து ஆற்றி வருகிறது. எனவே, முறாஇயான எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் சிலாங்கூர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள நிலையில், மற்ற விவகாரங்களைக் காட்டிலும் மக்களின் உயிருக்கே முதன்மை உரிமை அளிக்கப்பட வேண்டும்.

மேலும், புறாஅநகர் பகுதிகளில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கபப்ட வேண்டும்.

மேலும் நடமாட்ட முறையில் தடுப்பூசி போடப்படுவதால் தடுப்பூசித் திட்டம் விரைவுப் படுத்தப்படும். மிக சீக்கிரமாக அனைவரையும் சென்றடையும்.

மேலும், மாநில அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனை மிகச் சிறாந்த முன்னெடுப்பு எனப் பாராட்டியும் உள்ளார்.

தற்சமயம் தடுப்பூசிக்கு எதிரானப் பரப்புரை செய்கிறவர்களின் நடவடிக்க கண்டிக்கத்தக்கது. இருந்தாலும், மாநில அரசின் சீரிய முயற்சியால் அவை அவ்வளவாக எடுபடாது என சுல்தால் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியால் மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என சுல்தான்ன் நம்புகிறார்.

இன்னும் தடுப்பூசிக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கும் தரப்பினர் சமூகத்தில் இருக்கத்தான் ச்ர்ய்கின்றானர்,அ அவர்களால் சமூக நோய் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைய வாய்ப்புள்ளது என சிலதான் ஷரஃபுடின் கூறியுள்ளார்.

இது நாட்டிற்கு பேரபத்தாக முடியலாம். எனவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு சுய தூய்மையையும் கடைபிடிக்க சுல்தான் ஷரஃபுடின் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version