Site icon அநேகன்

பெட்ரோல் நிலையங்களில் உதவியாளர்கள் தேவை ! கூட்டரசுப் பிரதேச ம.இ.கா பரிந்துரை

கோலாலம்பூர் | ஜூன் 8 :-

பெட்ரோல் நிலையங்களீல் பணி புரிய உதவியாளர்கள் தேவை. இதனால் பொது மக்களிடையே கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என கூட்டரசுப் பிரதேச ம.இ.கா. கூறியுள்ளது.

பெட்ரோ நிலையங்களில் பொது மக்கள் எண்ணெய் நிரப்பும் “பம்”களைப் பலரால் பயன்படுத்தப்படுவதால் தொறுப் பரவல் மிக வேகமாக உள்ளது.

அனைவரும் தூய்மிக்கப்படாத அந்தப் “பம்”களைப் பயன்படுத்துவதால் தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதாக கூட்டரசுப் பிரதேச ம.இ.கா.வின் தலைவர் எஸ். ராஜா கூறியுள்ளார்.

எனவே, எல்லாப் பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோலை நிரப்ப தனி உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனால் பெருந்தொற்றுக் காலத்தில் பி40 தரப்பினருக்கு ஒரு வேலை வாய்ப்பாகவும் அமையும் என இராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் அவ்வாறானவர்களை பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் வேலைக்குப் பணியமர்த்தலாம் எனவும் இராஜா சொன்னார்.

Exit mobile version