Site icon அநேகன்

செந்துல் காவல் நிலையத்தில் தீ !

செந்துல் ஜூன் 11 :-

செந்துல் மாவட்டக் காவல் நிலையக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தில் எந்தப் பொருட்சேதமும் எற்படவில்லை என கோலாலம்பூர் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் கூறினார்.

காவல்துறையின் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் தீ ஏற்பட்டுள்ளது. அவ்வறையில் பழைய நாற்காலிகள், மேசைகள், காவல் நிலையத் தோட்டத்திற்குத் தேவையான உரம் போன்றவைகள் இருந்தன.

வழக்குகல் தொடர்பான எந்தப் பொருளும் தீயில் அழையவில்லை என அஸ்மி குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குறித்து இரவு 11.57 மணிக்குத் தமது தரப்பு அழைப்பு பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டது.

அதன் தொடர்பில் 15 பேர் கொண்ட குழு மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் செந்துல் , தீத்திவங்சா தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அத்தீ நள்ளிரவு 12.33 மணி அளவில் அணைக்கபட்டது. இச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version