கோலாலம்பூர் | ஜூன் 11 :-
அம்னோ, ம.இ.கா. கட்சிகளின் தலைவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக பிபிஎஸ் (Parti Bersatu Sabah) கட்சியின் தலைமைத்துவத்தினரும் மாமன்னரைச் சந்திப்பார்கள் எனப் பெரிந்தும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அக்கட்சியின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி மாமன்னரைச் சந்திப்பாரா இல்லையா ? அப்படி சந்தித்தால், எத்தனை மணிக்குச் சந்திப்பார் என எந்தத் தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.
Parti Bersatu Sabah தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் உறுப்பியக் கட்சி.
கடந்த மாதம் இக்கூட்டமைப்பில் இருந்து அக்கட்சி விலகி வாரிசான் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உறுவாக்கப் போவதாக வெளிவந்த தகவலை அதன் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி மறுந்திருந்தார்.

