Site icon அநேகன்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதியுங்கள் ! – பிரிஸ்மா

கோலாலம்பூர் | ஜூன் 12 :-

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் உணவகங்கள் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

இது குறித்து கருத்துரைத்த அதன் தலைவர் ஜவஹர் அலி தயிப், இக்காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணாவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கோவிட்-19 பெருந்தொற்றால் உணவகங்களின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அது மீட்சி பெறவும் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இக்காலக்கட்டத்தில் உணவகங்கள் 80 % பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

 மேலும், பொட்டலமாக உணவை வாங்கிக் கொண்டு செல்லும் முறாஇயில் எந்தச் சிக்கலும் இல்லை. இதனால், பெருமளவில் பரவும் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு முறையாகத்தான் பார்க்கப்படுகிறது என இன்று 12,500 உணவகங்களை நடத்தும் 4,200 உணனவ உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கும் பிரிஸ்மாவின் பிரதிநிதியாக வெளியிட்ட அறிக்கையில் ஜவஹர் அலி தயிப் குறிப்பிட்டிருந்தார்.

நாடு கடந்த மே 12 முதல் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் உள்ளது. இது தற்பொழுது முழு ஊரடங்காக எதிர்வரும் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய எஸ்.ஓ.பி.யின் படி உணவகங்கள் உட்பட வணிகங்கள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதனிடயே, உணவக உரிமையாளுக்கான உதவிகள் குறித்தும் பிரிஸ்மா பேசியது. குறிப்பாக கடன் திரும்பச் செலுத்தும் கால அவகாச நீட்டிப்பும் வணிகத்தள வாடகையும் அதில் அடங்கும்.

தானியங்கி முறையில் கடன் திரும்பச் செலுத்தும் கால அவகாச நீட்டிப்பு குறித்தும் வணிகத் தள வாடகை உதவி குறித்தும் ஏதேனும் அறிவிப்பு அரசாங்கத்திடமிருந்து வருமா எனக் காத்திருக்கிறோம்.

மிக விரைவில் செயல்பாட்டு நேர நீட்டிப்பு குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் பேசவுள்ளோம்.

தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பி40 பிரிவினருக்கும் வேலை இழந்தோருக்குமான வங்கிக் கடன் திரும்பச் செலுத்தும் கால அவகாச நீட்டிப்பு குறித்து மட்டுமே அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சிறு – நடுத்தர வணிகர்களுக்கான வியாபார அனுமதி இக்காலக்கட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளானது. பாகுபாடு பார்க்காமல் எம்40 தரப்பினர் உட்பட அனைவருக்குமான வங்கிக் கடன் திரும்பச் செலுத்தும் தளர்வு கோரப்பட்டு வருகிறது.

அன்ட விமர்சனங்கள் அரசியல் கட்சிகளிடமிருந்தும் வியாபாரச் சங்கங்களிடமிருந்தும் வந்த வண்ணம் உள்ளன.

இவ்விவகாரம் மாமன்னரைச் சந்திக்கும் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவராலும் விவாதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version