இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் பங்கேற்கவும்
கோலாலம்பூர் | ஜூன் 15:-
| ‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியைப் பற்றிய விவரங்கள் |
- இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் நடைபெறும் ‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியின் வழி அனைத்து மலேசியர்களும் இராகாவுடன் இணைந்து இவ்வாண்டு தந்தையர் நாளில் தங்கள் வாழ்க்கையின் ஹீரோக்களைக் கொண்டாடலாம்.
- கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இன்ஸ்டாகிராமில் பங்கேற்கவும்:
- போட்டியாளர்கள் தங்களது தந்தையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யும் போது, அதற்கான ஆக்கப்பூர்வமான விளக்கத்தையும் #RAAGAAPPA21 என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துக் கொள்வதோடு இராகாவையும் (@raaga.my) டேக் (tag) செய்ய வேண்டும்.
- பங்கேற்பாளர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் போட்டி காலம் முழுவதும் ‘பொது’ என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
- பத்து அதிர்ஷ்டசாலிகள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் மறுபதிவுச் செய்யப்படும். அதுமட்டும்மின்றி, இவ்வெற்றியாளர்களின் தந்தையர்கள் இராகாவின் ‘கலக்கல் காலை’ , ‘ஹைப்பர் மாலை’ பிரிவுகளில் சிறப்பு நேர்காணலுக்காகத் தொடர்புக் கொள்ளப்படுவர். மேலும், தந்தையர் நாளன்று ஒரு ஆச்சரியமானப் பரிசையும் அவர்களது தந்தைகள் பெறுவர்.
- மேல் விவரங்களுக்கு, இராகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வலம் வரவும்.

