கோலாலம்பூர் | ஜூன் 15 :-
அரசாங்கத்தின் உதவ்த் திட்டமான பரிவுமிக்க மக்கள் உதவித் தொகை (BPR) மேல்முறையிட்டுக்காக இன்று முதல் வருமான வரி வாரியத்தில் அதற்கான முகப்புகள் திறந்திருக்கும்.
ஒவ்வ்வொரு மாநிலத்தின் அலுவலக வேலை நாட்களின் அடிப்படையில் காலை 8.00 மணி முதல் நண்பகல் மணி 12.00 வரை அந்த முகப்புகள் திறந்திருக்கும். முன்கூட்டியே அதற்கான நேர்முகச் சந்திப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மைசெஜாத்தெராவில் ஆபத்து குறைவாக இருக்கும் நபர்களுக்கே உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும். வருமான வரி வாரியத்திற்கு வருகிறவர்கள் எஸ்.ஓ.பி.யை முறையாகப் பின்பற்ற வேண்டும். முகக்கவரி அணிதல், உடப்வெப்பநிலை பரிசோதனை, கூடல் இடைவெளி ஆகியன அவற்றில் முக்கியமானவை.
பரிவுமிக்க மக்கள் உதவித் தொகை (BPR) குறித்த மேல் விவரங்களுக்கு 1800-88-2747 எனும் எண்களில் வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அழைத்து தெளிவு பெறலாம்.
பரிவுமிக்க மக்கள் உதவித் தொகை (BPR) மேல் முறையீடு விண்ணப்பத்தை ஜூன் 15 முதல் 30 வரையில் மேற்கொள்ளலாம் என நேற்றூ நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
பொது மக்கள் தங்கல் வட்டாரங்களில் உள்ள வருமான வரி வாரிய அலௌவலகத்திற்கு வருகை புரியும் முன்னர் அது மூடப்பட்டுள்ளதா அல்லது செயல்படுகிறதா என்பதனை உறுதி செய்த பின்னர் வருமாறு வருமான வரி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தப் பட்டியல் பின்வருமாறு :

