Site icon அநேகன்

பிரதமரின் பெயர் மகியாதீன் எனக் குறிப்பிட வேண்டும் ! – பிரதமர் துறை அறிவிப்பு

கோலாலம்பூர் | ஜூன் 16:-

இனி அரசாங்க அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பிரதமர் முகிதீன் யாசினின் அதிகாரப்பூர்ப் பெயரையே பயன்படுத்த வேண்டும் என பிரதமர் துறை அலுவலகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அடையாள அட்டையின்படி பிரதமர் முகிதீன் யாசினின் அதிகாரப்பூர்வ பெயர் மகியாதீன் முகம்மது யாசின் Mahiaddin Md Yasin ஆகும்.

ஜூன் 3ஆம் நாள் பிரதமரின் தலைமை இரகசியச் செயலாளர் மார்ஸூக்கி முகம்மது கையொப்பமிட்ட அறிக்கை ஒன்று, இவ்விவகாரத்தைக் குறிப்பிட்டு பிரதமர் துறை அலுவலக அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய வழக்கறிஞர் இலாகாவின் பரிந்துரையின்படி பிரதமரின் பெயரை இவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும்

  1. Mahiaddin bin Md Yasin – மகியாதீன் முகம்மது யாசின்
  2. Tan Sri Dato’ Haji Mahiaddin bin Haji Md Yasin – தான் ஶ்ரீ டத்தோ ஹாஜி மகியாதீன் பின் முகம்மது யாசின்

எனவே, அனைத்து அரசு அதிகாரப்பூர்வ விவகாரங்களுக்கு பிரதமரின் பெயரும் கையொப்பமும் மேற்குறிப்பிட்டப்படி அவரின் அதிகாரப்பூர்வ பெயர் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆணை உடனடியாக நடப்புக்கு வருகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அந்த அறிக்கையை மார்ஸூக்கி உறுதிப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் நாள், பிரதமர் முகிதீன் யாசின் எனும் பெயரில் கையோப்பமிடப்பட்டத் தடுப்புக் காவல் ஆணையை ஷா ஆலாம் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமரின் (உண்மையான) அதிகாரப் பூர்வ அடையாள அட்டையில் இருக்கும் பெயரைப் பயன்படுத்தப்பட வேண்டும் என அது தெரிவித்தது.

இருந்தாலும், கடந்த நான்கு ஊரடங்கு ஆணையிலும் பிரதமர் தனது அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்தி இருந்தார்.

Exit mobile version