கோலாலம்பூர் | ஜூன் 16 :-
இன்று கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் பிற்பகல் 2.30 மணிக்கு மலாய் ஆட்சியாளர்களின் சிறப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அச்சந்திப்புக் கூட்டத்தில் கடந்த் அவாரம் மாமன்னரைச் சந்தித்த அரசியல் தலைவர்கள் முன்வைத்தக் கருத்துகள், பரிந்துரைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் ஆகியன குறித்து அரசுத் துறை வல்லுநர்களின் கருத்துகளும் இக்கூட்டத்தில் பேசப்படும் என டத்தோ பெங்கலோலா பிஜாயா இஸ்தானா நெகாரா அகமாட் ஃபாடில் ஷாம்சுடின் நேற்று தெரிவித்தார்.
கடந்த வாரம் மாமன்னர் 18 ஆளும் கட்சி – எதிர்க்கட்சித் தலைவர்களை நேரடியாகவும் இயங்கலை வழியும் சந்தித்தார்.
மேலும், பிரதமர் தான் ஶ்ரீ டத்தோ ஹாஜி மகியாதீன் முகம்மது யாசினையும் ஊரடங்கு செயற்குழுவின் தலைவர் அரிஃபின் ஸாக்காரியாவும் மான்னரைச் சந்தித்துள்ளனர்.
நண்அகல் தொடங்கி அரச வாகனங்கள் அரண்மனையை வந்தடைந்த வண்ணமாக உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 நாள் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா பதவியேற்றது முதல் மலாய் ஆட்சியாளர்களின் இரண்டாவது சந்திப்புக் கூட்டமாக இது அமைகிறது.
முதல் சந்திப்புக் கூட்டம் கடந்த ஆண்டு அக்தோபர் 25 ஆம் நாள் நடைபெற்றது.
கடந்த வாரம் மான்னரை அரசியல் தலைவர்கள் சந்தித்த பிறகு மாகெரான் பற்றிய விவாதங்கள் அதிகமாக இருந்தது.
முன்னாற் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இந்தப் பரிந்துரையை மாமன்னரிடம் முன் வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களும் அம்னோ தலைவரும் நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என மாமன்னரிடம் தெரிவித்திருந்தனர்.
கடந்த சனவரி 12 ஆம் நாள், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆகஸ்டு 1 ஆம் நாள் வரை ஊரடங்கை அறிவித்தார்.

