கோலாலம்பூர் | ஜூன் 16:-
மலாயாப் பல்கலைக்கழகம் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான தங்களின் சொந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டாம். தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது என உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னி அகமாட் கூறினார்.
தடுப்பூசி போடப்படாததால் சில மாணவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை என ஊடகங்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தன.
தடுப்பூசி மாணவர்கள் போடப்படுவதை அமைச்சு வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளைத் தாண்டி கோவிட்-19 தொடர்பான தங்களின் சொந்த விதிமுறைகளையும் எஸ்.ஓ,பி.களையும் தனியே உருவாக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றம் தனித் தனியே விதிமுறைகளை வகுக்கவில்லை.
பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலனில் அக்கரை கொள்ள வேண்டும். பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு முன்னர், 22 வயது மருத்துவ மாணவர் ஒருவர் தன்னை அப்பல்கலைக்கழகம் தேர்வு எழுத அனுமதிக்காததைச் சுட்டிக் காட்டி காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
தடுப்பூசி போடாமல் தேர்வு எழுத முடியாது என மலாயாப் பல்கலைக்கழகம் நிக் ஃபாரா எல்லிஷா எனும் அந்த மருத்துவ மாணவியிடம் முன்னரே தெரிவிக்கவில்லை என அவரின் தந்தை, முகம்மட் ரஸிஃப் இது குறித்துத் தெரிவிக்கயில் குறிப்பிட்டார்.
தடுப்பூசி தமக்கு வேண்டாம் என நிக் ஃபாரா முடிவு செய்துள்ளார்..
நேரடியாக நோயாளியை உட்படுத்தியத் தேர்வை எழுத நிக் ஃபாராவுக்கு மலாயாப் பல்கலைக்கழகம் தடை விதித்தது.

