Site icon அநேகன்

மஇகாவின் மூத்த தலைவர் தான்ஶ்ரீ நிஜார் காலமானார்

மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தான்ஶ்ரீ கே>எஸ். நிஜார் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. சீக்கியர் சமுதாயத்தை மட்டுமின்றி இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அவர் அரும்பாடு பட்டுள்ளார். அவர் காலமானதை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.

1999, 2004 ஆண்டு என இரண்டு முறை தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட்டுச் சுபாங் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றிருந்தார்.

நீண்ட காலமாக மக்கள் சேவையில் தம்மை இணைந்து கொண்ட தான்ஶ்ரீ நிஜாரின் மறைவிற்கு மஇகா தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே, மனிதவள அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்சரவணன், உதவித் தலைவர்கள் செனட்டர் டத்தோ டி. மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ முருகையா உட்படப் பலரும் தான்ஶ்ரீ நிஜாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்

Exit mobile version