கோலாலம்பூர் | ஜூன் 16 :-
இன்று இஸ்தானா நெகாரா அரண்மனையில் மலாய் ஆட்சியாளர்களின் சிறாப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் மாமன்னரைக் கடந்த வாரம் சந்தித்த அரசியல் தலைவர்கள் முன்வைத்தக் கருத்துகள் பரிந்துரைகள் பற்றிய கலந்துரையாடல் நடந்ததாக மலேசியாகினி தெரிவித்தது.
இந்த சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுல்தான்களீன் பட்டியல் பின்வருமாறு :
- பேரா மாநில சுல்தான் : சுல்தான் நஸ்ரின் ஷா
- ஜோகூர் மாநில சுல்தான் : சுல்தான் இபுராகிம் சுல்தான் இஸ்கண்டார்
- சிலாங்கூர் மாநில சுல்தான் : சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா
- கெடா மாநில சுல்தான் : அல் அமினுல் கரின் சுல்தான் சாலேஹுடின் பட்லிஷா
- திரங்கானு மாநில சுல்தான் : சுல்தான் மிஸான் ஸைனால் அபிடின்
- நெகிரி செம்பிலான் மாநில யாங் டி பெர்துவான் : துவான்கு முஹ்ரிஸ் அல்மர்ஹும் துவான்கு முனாவிர்
- மகாங் மாநில இராஜாவின் நிகராளி தெங்கு ஹஸ்ஸானால் இபுராகிம் அலாம் ஷா
- பெர்லிஸ் மாநில இளவரசர் : துவான்கு ஷேட் ஃபைஸுடின் புத்ரா ஜமாலுல்லாயில்
கிளாந்தான் மாநில சுல்தான், சுல்தான் முகம்மட் V இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் போன்ற விவகாரங்கள் குறித்தும் விளக்கமளிக்க நாட்டின் அரசுத் துறைகளின் முக்கியத் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களும் இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்களின் பட்டியல் பின்வருமாறு :
- நாட்டின் தேசிய தலைமைச் செயலாளர் : தான் ஶ்ரீ முகம்மட் ஸூக்கி அலி
- நாட்டின் ஆயுதப்படைத் தளபதி : தான் ஶ்ரீ அஃபெண்டி புவாங்
- நாட்டின் காவல்துறை தலைவர் : டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி
- நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா
நேற்று , பெர்சத்து கட்சியின் தலைவர் எனும் அடிப்படையில் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின், ஊரடங்கு சிறப்பு சுயேட்சைக் குழுத் தலைவர் துன் அரிஃபின் ஸாக்காரியா ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.

