Site icon அநேகன்

இந்தியத் தொழிலாளரைக் கொடுமை படுத்தியதாகக் கூறப்பட்ட உணவகத்தில் அதிரடிச் சோதனை !

பெட்டாலிங் ஜெயா | ஜூன் 18:-

இந்திய நாட்டுத் தொழிலாளரைக் கொடுமை படுத்தியதாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குற்றஞ்சாட்டப்பட்ட உணவகத்தில் உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் இணைந்து அதிரடிச் சோதனையை நேற்று மேற்கொண்டது.

பெட்டாலிங் ஜெயாவில் செயல்படும் அந்த உணவகத்தில் பணி புரிந்த வேலாயுதம் எனும் ஆடவர் தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேர்கொண்ட பார்வை எனும் நிகழ்ச்சியில் மலேசியாவில் தம்மையும் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு தொழிலாளரையும் அந்த உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரார இரவி எனும் இரவிந்திரன் என்பவரால் மிக மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டது குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.

அந்தக் காணொலி Behindwoods எனும் வலையொலி வாயிலாகவும் இணையத்தளத்தில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வந்தது.

மற்றொரு தமிழகத் தொழிலாளியான மைக்கல் ரிகன் தாஸ் என்பவரை அவ்விணாவகத்தின் உரிமையாளர் ஓரின வன்புணர்வு செய்ததாகவும் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா பழைய டவுன் (Old Town, Petaling Jaya) எனும் பகுதியில் செயல்படும் அவ்வுணவகத்தில் பிற்பகல் 1.00 மணியளவில் அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மனிதவள அமைச்சின் அதிகாரியான ரோஸ்லான் இது குறித்துத் தெரிவிக்கயில், தமது தரப்புக்கு இவ்விவ்காரம் குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகவும் கூறினார்.

முழு விசாரணை முடிந்த பின்னர் மிக விரைவில் இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு வேலாயுதம் மலெசியாவில் உள்ள உணவகத்தில் பணிபுரியத் தொடங்கியதாகக் கூறினார்.

சுற்றுப் பயண விசாவுடன் மலேசியாவுக்கு ஒரு இடைத் தரகர் மூலமாக வேலைக்கு வேலாயுதம் அனுப்பப்பட்டதாகவும் ஆறு மாதத்திற்குள் வேலை அனுமதி (WORK PERMIT) வாங்கிக் கொடுப்பதாகவும் அந்த இடைத் தரகர் சொன்னதாக வேலாயுதம் தெரிவித்தார்.

ஆனால், அந்த இடைத் தரகர் சொன்னதுபோல் செய்யவில்லை.

வேலாயுதத்தை அடைத்து வைத்ததாகவும், சம்பளம் முறையாகக் கொடுக்காமலும்,வேலாயுதத்தின் கடப்பிதழ் (PASSPORT) எரிக்கப்பட்டதாகவும் அடுக்காடுக்காகத் தமக்கு நடந்த அநியாயங்களை அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன் வைத்தார்.

மேலும், தன்னை விட தம்முடன் பணிபுரிந்த இன்னொரு தமிழகவாசியான மைக்கல் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாகவும் வேலாயுதம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், கடந்த 2019ஆம் ஆண்டு அந்த உணாவக உரிமையாளரின் பிடியில் இருந்து தப்பி ஓடி வேறு இடத்திற்குச் சென்று விட்டதாகவும் அவர் சொன்னார்.

Exit mobile version