இஸ்கண்டார் புத்தரி | ஜூன் 18 :-
மாமன்னரின் கட்டளைக்குப் பின்னர் உடனடியாக நாடாளுமன்றாக் கூட்டத்தை நடப்பு அரசாங்கம் நடத்தாதது மருத்தத்தை அளிப்பதாக இஸ்கண்டார் புத்ரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார்.
கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் தேவையையே முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும் என ஜ.செ.க.கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான கிட் சியாங் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டத்தை அவமதிக்கும் இது போன்ற நடவடிக்கையை இனியும் செய்து மேலும் ஒரு நெருக்கடியை உருவாக்க வேண்டாம். மாறாக, மலாய் ஆட்சியாளர்களின் சிறாப்பு சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் இட்டக் கட்டளைகளில் ஒன்றான நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என லிம் கிட் சியாங் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு உடனடியாக நடத்தப்பட்டு ஊரடங்கு தொடர்பான சட்டங்களும் தேசிய மீட்சித் திட்டத்தையும் விவாதிக்க இயலும் என கடந்த ஜூன் 16ஆம் நாள் மலாய் ஆட்சியாளர்களின் சிறப்பு சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்புடப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், சமூக ஊடகம் ஒன்றில் ஒளியேறிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் துறையின் அமைச்சர் (நாடாளுமன்றமும் சட்டமும்) தக்கியுடின் ஹஸ்ஸான், நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டும் என்றுதான் மாமன்னர் கூறியுள்ளாரே தவிர அது எப்போது என குறிப்பிடப்படவில்லை என கூறியிருந்தார்.
இதனிடையே, கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டாலும் கோபிட்-19 அன்றாட நேர்வுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதையும் லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

