Site icon அநேகன்

மாமன்னர் கட்டளையை அவமதிப்பதா ? – தக்குயூடினுக்கு எதிராக காவல்துறையில் புகார்

செமினி | ஜூன் 18

நாடாளுமன்றத்தைக் கூட்டும் படி மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்கள் கட்டளை இட்டுள்ளனர்.

ஆனால் எந்த தேதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்று மாமன்னர் அறிவிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் பேசியிருப்பது மாமன்னரை அவமதிக்கும் செயல் என்று சிலாங்கூர் உலுலங்காட் கெஅடிலான் கட்சி சாட்டியுள்ளது.

அமைச்சரின் செயல் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உலுலங்காட் கெஅடிலான் இளைஞர்கள் பிரிவு பிரிவு துணைத் தலைவர் விஷ்ணு தலைமையில் இன்று செமினி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலுலங்காட் கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் ஹனாபி, தேர்தல் குழு இயக்குனர் ராமச்சந்திரன், தகவல் பிரிவு தலைவர் ஜஸ்னி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version