Site icon அநேகன்

நாம் நமக்குள்ளேயே மோதிக் கொள்கிறோம்; கோவிட்-19ஐ எதிர்த்து அல்ல ! – டாக்டர் நோர் ஹிஷாம்

Health Director General Datuk Dr Noor Hisham Abdullah speaking to media at daily update of Covid-19 development in Putrajaya, April 16th, 2020 MOHD SAHAR MISNI/The Star

புத்ராஜெயா | ஜூன் 19 :-

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மலேசியர்களின் ஒற்றூமை சரிந்திருப்பதைக் காண முடிகிறது. அதுவே நாளுக்கு நாள் நேர்வுகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக அமைகிறது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கருத்துரைத்துள்ளார்.

ஓராண்டுக்கு மேலாக கோவிட்-19 பெருந்தொற்றால் நாடு பாதிப்படைந்திருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் எஸ்.ஓ.பி.யை முழுதாய் பின்பற்றுவதில் இன்னும் சிக்கலானதாக உள்ளது.

அனைவரும் ஒன்றாக எஸ்.ஓ.பி.யைக் கடைபிடிப்பதில் இன்னும் சிக்கல் உள்ளது. அதில் ஒற்றுமை இல்லை. நாம் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்க்காமல் நமக்கு நாமே ஒருவருக்கொருவர் தங்களின் கருத்துகள் அடிப்படையில் மோதிக் கொண்டிருக்கிறோம்.

இன்று தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழ ஏற்பாட்டில் மனநல முதலுதவி குறித்த அனைத்துலக இயங்கலை கருத்தரங்கில் பேசிய தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அவ்வாறு கருத்துரைத்தார்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் யாவும் ஆழமான பரிசீலனைக்குப் பிறகே எடுக்கப்படுகின்றன எனும் உறுதிப்பாட்ட வழங்கினார்.

வாழ்வாதாரத்துக்கும் சுகாதாரத்துக்கும் இடையே சமநிலைப் படுத்தும் முயர்சியில் சுகாதாரத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பொருளாதாரத்திற்கு சிறு பாதிப்பு ஏற்படும் முடிவை நாம் எடுப்போம்.

இதே போல் மற்ற விவகாரங்களிலும் முடிவெடுக்கப் பலதரப்பட்ட கூறுகளை ஆராய்வதோடு பல சிக்கல்களையும் சிந்திக்க வேண்டி உள்ளது என டாக்டர் நோர் ஹிஷாம் சொன்னார்.

Exit mobile version