Site icon அநேகன்

மாமன்னரின் கட்டளையை மதிக்கவில்லை என்றால் அம்னோ தேசியக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் !

கோலா திரங்கானு | ஜூன் 20 :-

மாமன்னரின் கட்டளையை புறந்தள்ளிய தேசியக் கூட்டணியில் இருந்து அம்னோ விலக வேண்டும் என திரங்கானு மாநில அம்னோவின் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

உடனடியாக நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வில்லை என்றால் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் தேசியக் கூட்டணியின் உறுக்கட்சியாக இருப்பதில் இருந்து விலக வேண்டும் என அது கூறியுள்ளது.

அரண்மனையின் ஆணையை அவமதிக்கும் துரோக அரசியலில் இருந்து அம்னோ தள்ளி இருக்க வேண்டும் என அதன் தலைவரான தெங்கு ஹாஃபிஸ் தெங்கு புத்ரா தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, ஆகஸ்டு முதலாம் திகதிக்குள் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படுவதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தேசிய அம்னோவின் இளைஞர் பிரிவும் வலியுறுத்தி இருந்தது.

மற்றொரு நிலவரத்தில், நாட்டின் தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவின் பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல் ஆகிய இரண்டு கோட்பாடுகளையும் மீறி நாடாளுமன்ற அமர்வை நடத்தாமல் காலந்தாழ்த்துவது அரசின் தந்திரமாக உள்ளது என  கிளாந்தான் மாநில அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் நோர் ஹரிரி முகம்மட்நோர் கூறினார்.

இது மலாய் ஆட்சியாளர்களின் மீது விழுந்த துரோகமாகும் என அவர் சித்தரித்தார்.

அம்னோவின் வாக்குறுதியான அரசரின் கட்டளையை அவமதிக்கும் தரப்பினரோடு உடன்படாது என்பதற்கு ஒப்ப அம்னோவின் உயர்மட்ட தலைவர்களும் அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து விலக வலியுறுத்தும் என நோர் ஹரிரி முகம்மட்நோர் தெரிவித்தார்.

Exit mobile version