இஸ்கண்டார் புத்ரி | ஜூன் 22:-
பாராளுமன்றம் விரைவில் தொடங்கப்பட வேண்டுமா என்று ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைப்பது பிரதமர் தன் பதவியில் இருக்கும்போது, பிரதமர் பதவி விலக வேண்டுமா என்று ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைப்பது போன்றதாகும் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
பாராளுமன்றம் விரைவில் மறுசீரமைக்க வேண்டுமா என்று ஆய்வு செய்ய எதுவும் இல்லை எனறி இந்நிலையில் மகியாதீன் முகம்மது யாசின் அதைச் செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
மகியாதீன் அவ்வாறு செய்யத் தயாராக இல்லை என்றால் அவர் மாட்சிமை தாங்கிய பேரரசின் உத்தரவை நிராகரிப்பதோடு கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறுதை தடுப்பதும் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதப்படுத்தும் செயலை இது காட்டுகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.

