ரவுப், குவால குராவ் வட்டாரத்தில் புதிய கோவிட் தடுப்பூசி மையம் ஜூலை மாதம் தொடக்கம் யு.ஐ.தி.எம், ரவுப்பில் செயல்படவுளது. இம்மையத்தில் நாளொன்றுக்கு 1000 பேருக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் மாண்புமிகு தி லியன் கேர் தெரிவித்தார்.
தற்போது ஒரு தனியார் தடுப்பூசி வழங்கும் மையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
ஆகவே ரவுபில் செயல்பட்டுவரும் அனைத்து தனியார் மருத்துவ மையங்களும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு பொது மக்களுக்குத் தடுப்பூசி வழங்க முன் வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் இதற்கான முன்பதிவுகள் மைசெஜாத்தரா வழியே நடைபெறும் எனவும் இன்னும் தடுப்பூசிக்குப் பதிவு செய்யாதவர்கள் தங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறு மாண்புமிகு தீ லியன் கேர் வழியுறுத்தினார்.

