Site icon அநேகன்

சுல்தான் இபுராகிம் : ஜோகூர் சட்டமன்றம் ஆகஸ்டு 12 ஆம் நாள் கூடும் !

ஜோகூர் பாரு | 23/6/2021

எதிர்வரும் 12-8-2021 ஆம் நாள் ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என இன்று ஜோகூர் மாநில சுல்தான், சுல்தான் இபுராகிம் சுல்தான் இஸ்கண்டார் அறிவித்தார்.

கோத்தா இஸ்கண்டாரில் நடைபெறவுள்ள அந்தச் சட்டமன்றக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப் போவதாகவும் சுல்தான் இபுராகிம் தெரிவித்தார்.

மக்களுக்காகவும் ஜோகூர் மாநிலத்திற்காகவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அந்த அமர்வில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்ப்பாக கோவிட் பெருந்தொற்றுத் தாக்கத்தால் பாதிப்படைந்த ஜோகூர் மாநில மக்களுக்கு பொருளாதார மீட்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜோகூர் மாநில மக்களின் வாழ்க்கையைக் கண்டு தாம் வருத்தப்படுவதாகவும் அச்சப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய நாள் வரையில் கோவிட்-19 பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது தமக்கு வேதனையளிப்பதாகவும் தமது முகநூல் பக்கத்தில் உல்தான் இபுராகிம் குறிப்பிட்டார்.

இன்று காலை சுல்தான் இபுராகிமை ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மட், ஜோகூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர் அஸ்மி ரோஹானி, ஜோகூர் மாநில சட்ட ஆலோசகர் அமிர் நஸ்ருடின் ஆகியோர் சந்தித்தனர்.

மேலும், ஜோகூர் மாநில கோவிட்-19 நிலவரம் குறித்து அறிந்து கொள்ள ஜோகூர் மாநில சுகாதாரத் திணைக் களத்தின் இயக்குநர் டாக்டர் அமான் ராபூவையும் சுல்தான் இபுராகிம் சந்தித்தார்

கடந்த 17 ஆம் நாள், ஜோகூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டம் உடனடியாக நடத்தப்பட அம்மாநில முதல்வர் முயற்சிக்க வேண்டும் என ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தி இருந்தது.

அதற்கும் முன்னதாக மே 25ஆம் நாள், அனைத்து நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக சந்திப்புக் கூட்டத்தை நடத்தி ஜோகூர் மாநிலத்தில் கோவிட்—19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அதன் தாக்கம் குறித்தும் பேச சுல்தான் இபுராகிம் கட்டளையிட்டிருந்தார்.

கடந்த மே 27 ஆம் ந்நாள் இயங்கலை வாயிலாக ஜோகூர் மாநில முதல்வரின் தலைமையில் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது மற்ற மாநிலங்களுக்கு ஜோகூர் ஒரு முன்னோடியாக உல்ளது என ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி கூறியது.

தேசிய மீட்சித் திட்டத்தின் அடிப்படையில் அதன் மூன்றாக் கட்டத்தில் மட்டுமே நாடாளுமன்றம் திறக்கப்படும் எனப் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் குறிப்பிட்டார். அது செப்தெம்பர் மாத வாக்கில் நடக்கலாம் எனவும் கூறியிருந்தார்.

Exit mobile version