ஷா ஆலாம் | 26/6/2021 :-
எதிர்வரும் 23/6/2021 முதல் 3/9/2021 வரையில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 14ஆம் தவணை அமர்வு நடப்பதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் சராப்புதின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது குறித்து சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் அவைத்தலைவர் இங் சூ லிம் தெரிவிக்கயில், தனது இரகரிய செயலாளர் முகம்மது முனிர் பானியின் வழி அனுப்பியக் கடிதத்தில் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் திறக்கப்படுவதற்கு அவர் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சட்டமன்ற அமர்வின் முதல் நாளன்று சுல்தான் சராப்புதீன் அதனைத் தொடக்கி வைக்க எனாவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் நாளில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்கள் தொடங்கும்.
இந்தக் கூட்டத்தின் செய்தி சேகரிப்புக்கு இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட ஊடகவியலாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும்.

