Site icon அநேகன்

வரும் 28/6/2021க்குப் பிறகு அனைத்து தொழிலதுறைகளும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்! – மைக்கி கோரிக்கை

கோலாலம்பூர் | 26/6/2021 :-

கோவிட்-19 தொற்றின் மூன்றாவது அலையால் நாட்டில் முழு பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் உள்ளது. இக்காலக்கட்டத்தில் ஒரு சில தொழில் துறைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. இந்த சூழ்நிலையில் முழுபொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் 28/6/2021 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இக்கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமானல் அரசாங்கம் மூடக்கி வைக்கப்படுள்ளத் தொழில் துறைகள் செயல்படுவதற்க்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மைக்கியின் தேசிய தலைவர் டத்தோ நா.கோபலகிருஷ்ணன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

மூடக்கி வைக்கப்படுள்ளத் தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் தற்பொழுது மன உளைச்சலுக்கு அளாகியுள்ளனர். அவ்வகையில், மைக்கி அவர்களின் நிகராளியாய் நாட்டின் பிரதமருக்குத் தங்களின் கோரிக்கையைக் கடிதம் வாயிலாக அனுப்பியுள்ளது என டத்தோ நா.கோபலகிருஷ்ணன் கூறினார். முடி திருத்தும் நிலையம், ஜவுளி, உலோகம் மறுசூழற்ச்சி மையங்கள் போன்று, அனைத்து வியாபாரங்களும் செயல்பட அனுமதிக்கப்படுவது குறித்து மைக்கி கோரியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

தொழில் துறைகளுக்குத் தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) கூறும் விதிமுறைகளைப் பின்பற்றுவோம் என மேலும் அவர் கூறினார். அனைத்து வியாபாரங்கள் திறக்கும் காரணத்தினால் அரசாங்கம் கடுமையான விதிமுறைக்களை அறிவிக்க வேண்டும் எனவும் டத்தோ நா.கோபலகிருஷ்ணன் கூறினார். அதனை நாங்கள் பின்பற்றுவோம் என அவர் குறிப்பிட்டார்.

உணவகங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அணுமதிக்க வேண்டும். உணவகத் துறையில் உள்ளவர்கள் மிகவும் நட்டத்தில் உள்ளார்கள். அவர்களின் சுமையைக் குறைக்கவும், மக்களுக்கு அன்றாட வேளையில் உணவுச்சுமை ஏற்படாமல் இருக்கவும் இஃது உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வற்றாத ஆதரவை மைக்கி வழங்கும் என டத்தோ நா.கோபலகிருஷ்ணன் பத்திரிகை செய்தியில் சொன்னார்.

Exit mobile version