Site icon அநேகன்

கோவிட்-19 நேர்வுகள் குறைவான மாநில அரசுகள் எஸ்.ஓ.பி.யை தளர்த்த முடியாது ! – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

கோலாலம்பூர் | 30/6/2021 :-

தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) மாநில அரசு தளர்த்த முடியாது என தற்காப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய நிலையிலும் சரி மாநில நிலையிலும் சரி, தேசியப் பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட எஸ்.ஓ.பி.யை மட்டுமே பயனபடுத்த வேண்டுமே அன்றி, சொந்த எஸ்.ஓ.பி.க்களை உருவாக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் மாநில அரசுகள் எஸ்.ஓ.பி.க்களை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கும் அதிகாரம் இருந்தாலும், தற்போதைய விதிமுறைகளை அவ்வாறு மாற்ற முடியாது என அவர் கூறினார்.

“உணவுக் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. அந்த நேரத்தை இரவு 8.00 மணியாக குறைக்கலாமே அன்றி, அதை இரவு 12.00 மணியாக நீட்டிக்க முடியாது.”

இதனிடையே, குறைவான கோவிட்-19 நேர்வுகளைப் பதிவு செய்யும் மாநிலங்களில் தேசிய மீட்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு விதிமுறைகளை மாற்ற சில மாநிலங்களின் விண்ணப்பம் குறித்து அமைச்சரிடம் வினவியபோது, அது குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆராய்ந்து வருகிறது என அவர் கூறினார்.

அவ்வாறு மாற்றம் ஏதும் செய்தால் மக்களிடையே குழப்பம் ஏற்அட்டு விடும்.

எனவே, தேசிய நிலையில் அடுத்தக் கட்ட விதிமுறை தளர்வை மதிப்பிடலாம் என பரிந்துரைக்கிறோம் என இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

ஆனால், பெர்லிஸ் போன்ற மாநிலம் மிகக் குறைவான கோவிட்-19 நேர்வுகளைப் பதிவு செய்திருந்தாலும்.தேசிய மீட்சித் திட்டத்தின் வரையறையின்படி முதலாம் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாற்றம் செய்யவோ விதிமுறைகளைத் தளர்த்தவோ முடியாது என அவர் தெரிவித்தார்.

எனவே, தேசிய மீட்சித் திட்டத்தின் வரையறைப்படி ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் அருளால் சரியான காலத்தில் அறிவிக்கப்படும். மக்கள் தொகையில்

100,000 பேருக்கு எத்தனை நேர்வுகள் என மாநில அடிப்படையில் கணிக்கிடப்பட்டால் அனைவருக்கும் நியாயமானதாக இருக்குமென அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version