கோலாலம்பூர் | 30/6/2021 :-
நாடு முழுவதும் உள்ள ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) கிளைச் சேவை முகப்புகள் நாளை முதல் வார நாட்களில் காலை 8.30 – பிற்பகல் 2.00 வரையில் தேர்தெடுக்கப்பட்ட சில சேவைகள் வழங்கத் திறந்திருக்கும்.
இன்று அவ்வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பணி ஓய்வு நிதி குறித்த சேவைகளை வழங்குவது என்பது வாரிய உறுப்பினர்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் முக்கியம் என அது குறிப்பிட்டது.
நாளை தொடங்கி வழங்கப்படும் சேவைகளில் 50, 55, 60 வயது உறுப்பினர்களின் நிதி மீட்புச் சேவைகள், சுகாதாரம், இறப்பு, தொடர்பான நிதி மீட்பு, வங்கிக் காசோலை போன்றவை வழங்கப்படும்.
ஊழியர் சேமநிதி வாரிய முகப்புக்கு வரும் முன்னர் அதன் உறுப்பினர்கள் இயங்கலை (www.kwsp.gov.my/janjitemu) வழி நேர்முகச் சந்திப்புக்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
நேர்முகச் சந்திப்புக்கும் சேவை வழங்குவதற்கும் ஊழியர் சேமநிதி வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு அழைப்பர்.
அதனைத் தவிர்த்து, ஊழியர் சேமநிதி வாரியத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் அதன் உறுப்பினர்களும் இணையக் கணக்கில் [i-Akaun (ahli) dan i-Akaun (majikan)] செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல் விவரங்கள் அறிந்து கொள்ள ஊழியர் ஏமநிதி வாரியத்தை 03-8922 6000 எனும் எண்களிலும் www.kwsp.gov.my எனும் இணையத்தளத்தையும் வலம் வரலாம்.

