Site icon அநேகன்

மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் அத்தோபர் மாதத்திற்குத் தள்ளி வைப்பு !

கோலாலம்பூர் | 30/6/2021 :-

நாளை நடப்பவிருப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்த மலாய் ஆட்சியாளர்களின் 258வது சந்திப்புக் கூட்டம் எதிர்வரும் 27/10/2021 ஆம் நாளுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் அலுவலகத்தின் இணையத்தளத்தில் அத்தோபர் 27 – 28 ஆம் நாள் அந்தச் சந்திப்புக் கூட்டம் நடக்கும் எனவும், அதற்கு முந்தைய நாளில் அக்கூட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி நடக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கும் முன்னதாக மாநிலங்களின் முதல்வர்கள் – முதலமைச்சர்களின் சந்திப்பு அத்தோபர் 25 ஆம் நாள் நடைபெறும் என அது தெரிவித்தது.

Exit mobile version