Site icon அநேகன்

ஆகத்து 25இல் பேரா மாநில சட்டமன்றம் கூடுகிறது ! சுல்தான் நசுரின் தொடக்கி வைக்கிறார் !

ஈப்போ | 30/6/2021 :-

பேரா மாநில ஆட்சியாளரான சுல்தான் நசுரின் எதிர்வரும் ஆகத்து மாதம் 25 ஆம் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு அம்மாநிலத்தின் சட்டமன்ற கூடுவதற்கு அனுமதி வழங்ககியுள்ளதாக மாநில முதல்வர் டத்தோ சராணி முகம்மது தெரிவித்தார்.

மேலும், அக்கூட்டத்தை அவரே நேரில் வந்து தொடக்கி வைக்கவுள்ளதாகவும் டத்தோ சராணி கூறினார்.

நேற்று சுல்தானை டத்தோ சராணி முகம்மதுவும் மாநில அரசின் செயலாளர் டத்தோ அகமாட் சுவாய்டி அப்துல் இரகிம். சட்ட ஆலோசகரருடனும் சென்று சந்தித்துள்ளனர்.

முன்னேறாடுகளின்படி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நேரடி சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள், மாறாக, இலாகா / துறை சார்ந்த தலைமைப் பொறுப்பாளர்கள் இயங்கலை வழி இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதனை பொது மக்கள் நேரலையில் முகநூல், வலையொளி போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் காணலாம்.

இந்த தேசிய மீட்சித் திட்டக் காலக்கட்டத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற இருப்பதால், பாதுகாப்பு குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்துடனான ஓர் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி அதன் வழி சட்டமன்றக் கூட்டத்தின் போது எவ்வாறான செயல்பாட்டுத் தர விதிமுறைகளைப் பின்பறறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தினுள் வர அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் அமரும் இடங்களுக்கிடையிலான தூர இடைவெளி. இதர விதிமுறாஇகள் அதில் அடங்கும்.

இந்தச் சட்டமன்றக் கூட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் நிகராளிகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள வழிகளைக் காண வழி வகுக்கும் என அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version