Site icon அநேகன்

தேவைப்படுவோருக்குக் காவல்துறையின் உதவி : அமைச்சர் ஸூராய்டா பாராட்டு !

கோலாலம்பூர் | 3/7/2021 :-

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் உதவிகள் தேவைப்படுவோருக்கு அம்மாநில காவல்துறை உதவி புரிய இருப்பதை வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஸூராய்டா கமாருடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அந்த உன்னத நோக்கம் நிறைவேற அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம் அவ்வட்டாரக் காவல்துறை நிலையங்களுடன் இணாஇந்து பணியாற்ற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கோவிட்-19இன் தாக்கத்தால் நெருக்கடியானக் காலக்கட்டத்தில் உணவுக்கும் இதர தேவைகளுக்கும் சிரமப்படும் மக்களை அடையாளம் காணும் சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகம்மட்டின் முயற்சி வரவேற்கத்தக்கது.

அவரின் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இறங்கினாலும் அது அவ்வப்போது மேலும் மேம்படுத்தப்படும் என ஸூராய்டா கூறினார்.

சிலாங்கூரின் பல பகுதிகளில் நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கபட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பண நெருக்கடியால் உதவிகள் தேவைப்படுவோரை  இன்று முதல் சிலாங்கூர் காவல்துறை அடையாளம் காணும் என அர்ஜுனைடி முகம்மட் கூறியிருந்தார்.

ஒவ்வொரு காவல் நிலையத் தலைவருக்கும் இது குறித்து ஆணையிடப்பட்டிருப்பதாகவும் உணவுப் பொருள் தட்டுப்பாடு, உளவியல் பிரச்சனைகள், இதர பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படும் எனவும் அவர் குறிபிட்டிருந்தார்.

அடையாளம காணாப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்டத் துறைகளுக்கும் இலாகாக்களுக்கும் அவ்விவகாரத்தைக் கொண்டு செல்லப்படும் என அவர் கூறியிருந்தார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் வீட்டில் வெள்ளைக் கொடியை பறக்கவிடுவோருக்கு எப்படி உதவிகள் கொண்டு செல்லப்படும் என்பது குறித்துன் வினவியபோது, பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களை எந்நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என அர்ஜுனைடி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மாதம் தொட்டே வெள்ளைக் கொடி பறக்கவிடும் நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பலரும் அதனால் உதவிகள் பெற்று வருகின்றனர்.

Exit mobile version