Site icon அநேகன்

கேஎல் – சிலாங்கூர் பிகேபிடி பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நிறுத்தம் ! – அமைச்சர்

கோலாலம்பூர் | 3/7/2021 :-

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பகுதிகள் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபதில்லா யூசீஃப் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து MITIயின் அனுமதிக் கடிதம் பயன்படுத்த முடியாது என அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், மிக அவசியமான மேம்பாட்டுப் பணிகள், மறுசீரமைப்புப் பணிகள், மின்சாரம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

குறிப்பிட்ட இந்தப் பணிகளை மேற்கொள்ள தொடர்புடையவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதி பெற வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version