Site icon அநேகன்

அடுத்த மாதம் கேஎல், இலாபுவானில் நிலைமை சீரடையும் ! – அன்னுவார் மூசா

கோலாலம்பூர் | 3/7/2021 :-

தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை அதிகரித்திருப்பதால் அடுத்த மாதம் நிலைமை சீரடையும் எனத் தாம் கணித்திருப்பதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா கூறியுள்ளார்.

இவ்விரு பகுதிகளிலும் கோவிட்-19 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாத வாக்கில் கோலாலம்பூர் – இலாபுவான் பகுதியின் 80 விழுக்காட்டு மக்கள் இரண்டு தடுப்பூசிக்களையும் போட்டுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கைகள், பள்ளிவாசலில் தொழுகை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவற்றை எஸ்.ஓ.பி.யுடன் மேற்கொள்ளலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று வரையில் கோலாலம்பூரைச் சேர்ந்த 100 % பெரியவர்கள் தடுப்பூசிக்குப் பதிந்துள்ள நிலையில் 61 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர்.

கோலாலம்பூரில் ஏறத்தாழ 2 மில்லியன் மக்கள் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இலாபுவான் தீவில் 84.8 % மக்கள் தடுப்பூசிக்குப் பதிந்துள்ளா நிலையில் 35.7 % மக்கள் முதல் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

Exit mobile version