Site icon அநேகன்

5ஆம் நாள் முதல் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையும் 5 மாநிலங்கள் !

கோலாலம்பூர் | 3/7/2021 :-

தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்று முக்கிய வரையறைகளை அடைந்ததால் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் வெற்றிகரமாக எதிர்வரும் 5ஆம் தேதி நுழைய நடுவண் அரசு அனுமதித்துள்ளது.

பேரா, பெர்லிஸ், கிளாந்தான், திரங்கானு, பகாங் ஆகிய மாநிலங்கள் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைகின்றது.

இதனை பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைய மூன்று முக்கிய வரையறைகள் மதிப்பிடப்படும்.

  1. 4,000 கோவிட்-19 நேர்வுகளுக்குக் கீழ் இருக்க வேண்டும்.
  2. தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் இருக்க வேண்டும்.
  3. மக்கள் தொகையில் 10% முழு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,

இந்த அடிப்படையில் அந்த 5 மாநிலங்கள் தேசிய மீட்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைகின்றன.

அதன் கணிக்கீடு பின்வருமாறு :

மேற்கண்ட தகவலின் அடிப்படையில், பெர்லிஸ் மாநிலத்தின் கோவிட்-19 நேர்வுகள் நான்காம் கட்டத்தில் இருக்கின்ற நிலையில் திரங்கானுவும் சபாவும் மூன்றாம் கட்டத்தில் உள்ளன.

இருந்த போதிலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட வேண்டும்.

Exit mobile version