Site icon அநேகன்

படுக்கைகள் குறைபாட்டால் தரையில் நடந்த சிகிச்சை ! – கோலாலம்பூர் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்

கோலாலம்பூர் | 4/7/2021 :-

கோவிட்-19 தாக்கத்தால் கோலாலம்பூர் மருத்துவமனையில் படுக்கைகள் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நோயாளிக்குத் தரையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது என அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெரிக் கோரே விளக்கமளித்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் நோயாளிகள் கோவிட்-19 நான்காம் கட்டத்தில் உள்ளவர்களாக இருக்கின்றனர். இதனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருந்தாலும், அவ்வப்போது படுக்கைகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு மற்றப் பிரிவு அதிகாரிகளும் உதவுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தரையில் சிகிச்சை வழங்கப்படுவது போல ஒரு படம் மிகத் தீவிரமாகப் பரவி வந்ததைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை டாக்டர் ஹெரிக் கோரே கூறினார்.

அச்சமபவம் குறித்து மேலும் பேசிய டாக்டர் ஹெரிக் கோரே, மூச்சும் நாடித்துடிப்பும் இல்லாத மயக்க நிலையில் நோயாளி ஒருவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் அவ்வேளையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்துப் படுக்கைகளிலும் நோயாளிகள் இருந்ததாகவும் கூறினார்.

எனவே, கொண்டுவரப்பட்ட நோயாளிக்கு சமநிலையான தரையில் உடனடி சிகிச்சை (CPR) வழங்கப்பட்டது.

இருந்த போதிலும் அந்த நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைன் மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய உடற்கூறாயவு மேற்கொள்ளப்படுகிறது எனவும் டாக்டர் ஹெரிக் கோரே தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு நோயாளிக்கு தரையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டாக்டர் ஹெரிக் கோரே, வளிப்பு தாக்கத்தால் கட்டிலில் இருந்து கீழே விழும் அபாயம் இருந்ததால் பாதுகாப்பு கருதி அவ்வாறு செய்யப்பட்டதாகவும், அந்நோயின் தாக்கத்தால் அவரது எச்சில் அந்த நோயாளியின் நுரையீரலுக்குள் செல்லாமல் இருப்பதற்கும் அந்த முறை கையாளப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொல்ளப்படுவது ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அபாய நிலையைக் கடந்து விட்டால், அருகில் உள்ள செராள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர் எனவும் டாக்டர் ஹெரிக் கோரே குறிப்பிட்டார்.

Exit mobile version