Site icon அநேகன்

கேல்-சிலாங்கூரில் கடுமையான விதிமுறைகளுடன் சட்ட நிறுவனங்கள் இயங்க அனுமதி !

கோலாலம்பூர் | 4/7/2021 :-

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளக் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பகுதிகளில் உள்ள சட்ட நிறுவனங்கள் கடுமையான எஸ்.ஓ.பி.யைப் பின்பற்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் – சட்டம்) தக்கியூடின் ஹசான் இது குறித்து தெரிவிக்கயில், அரசாங்க இலாகாக்கள், நீதிமன்றங்கள் போன்றவைகளின் பணிகள் சீராக நடக்க அவசியமாகக் கருதப்படும் சட்ட நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படும் முன் பல கோணங்களில் கலந்தாலோசிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பிறபகல் 1.00 மணி வரை இரண்டு அல்லது 20% ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளது.

நேர்முகச் சந்திப்புக்கு சட்ட நிறூவனங்கள் முன்கூட்டிய விண்ணப்பித்திருக்க வேண்டும்.

CIMS 3.0இன் வழி சட்ட நிறிவனங்கள் இயங்க விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவ்வாறு கிடைக்கப்பெறும் அனுமதி தேசிய மீட்சித் திட்டத்தின் முதற்கட்டம் முதல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இது குறித்த விதிமுறைகளை தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் இணையத்தளத்தில் காணலாம்.

மேலும், அனுமதி பெற்ற சட்ட நிறுவனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற செயல்படுகின்றனவா என அவ்வப்போது அதிகாரத்துவத்தினரால் கண்காணிக்கப்படும் எனவும் தக்கியூடின் குறிப்பிட்டார்.

Exit mobile version