Site icon அநேகன்

சிகிச்சையில் பிரதமர் : இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் !

கோலாலம்பூர் | 4/7/2021 :-

பிரதமர் மகியாதின் முகம்மது யாசின் இன்னும் மருத்துவமனை சிகிச்சையில் இருப்பதாக அவரது அலுவலகம் இன்று தகவல் வெளியிட்டிருந்தது.

தற்பொழுது அவர் நலமாக இருப்பதாகவும் சிகிச்சையின்போது அவரது முந்தையப் புற்றுநோய் பாதிப்பு மீண்டும் ஏற்படவில்லை என அது கூறியது.

மருத்துவர்கள் குழு ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சிகிச்சையின்போதே பிரதமர் தமது பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமது சுகாதார நலனுக்காக இறைவனை வேண்டிக்கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version