சிப்பாங் | 4/7/2021 :-
நேற்றிரவு இங்குள்ள தாமான் பூங்கா ராயாவில் கோவிட்-19 தனிமைப்படுத்தலை மேற்கொண்டிருக்கும் 14 கையுறை ஆலை ஊழியர்களுக்கு சிப்பாங் காவல்துறையினர் உடனடியாக உணவுப் பொருட்கள் உதவியை வழங்கினர்.
நேற்றிரவு 8.10 மணியளவில் சிப்பாங் காவல்துறையினருக்கு பெண்மணி ஒருவர் தொடர்பு கொண்டு தமது அண்ணனுடன் 13 நண்பர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் WRP Asia Pacific Sdn Bhd நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களாவர் என சிப்பாங் காவல்துறை தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
பரிவு, பொறுப்புணர்ச்சி அடிப்படையில், தகவல் பெற்ற உடன் விரைந்து அவர்களுக்கு உதவ தமது அதிகாரிகளைப் பணித்ததாக சிப்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்ரான் பின் வான் யூசோஃப் கூறினார்.
நேற்று இரவு 9.15 மணி அளவில் 16 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு காவல்துறாஇயினரால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது என அந்த முகநூல் பதிவு மேலும் குறிப்பிட்டது.

