கோலாலம்பூர் | 4/7/2021 :-
நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தம் செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரித்துவத்தினருடன் இணைந்து தீர்வு நோக்கிய நடவடிக்கையில் இறங்கியிருப்பதை மலேசிய மருத்துவச் சங்கம் மீண்டும் வலியுறுத்தியது.
எனவே, அதனைத் தொடர்புப் படுத்தி CODE BLACK எனக் கூறப்படும் கருப்புக் கூறியீட்டை இம்மாதம் முதல் தேதியில் இருந்து 12ஆம் நாள் வரை கடைபிடிக்கப்படுவதை அது ஆதரிக்கிறது. அதனை முன்னிட்டு பொது மக்கள் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஊக்குவிக்கிறது எனவும் மலேசிய மருத்துவச் சங்கம் தெரிவித்தது.
இருப்பினும், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பொது வெளியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கோ அல்லது வேலை நிறுத்தத்தையோ மலேசிய மருத்துவச் சங்கம் ஆதரிக்கவில்லை.
இதனிடயே, நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும், பிரதமர் பதவி விலக வேண்டும், ஊரடங்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனும் கருப்புக் கொடி பரப்புரைக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் விளக்கினார்.
வேறு ஒருன் தரப்பினர் தொடங்கிய கருப்புக் கொடி பரப்புரைக்கும் மலேசிய மருத்துவச் சங்கத்தின் கருப்புக் குறியீடு – கருப்பு திங்கள் பரப்புரைக்கும் இடையே குழப்பம் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக டாக்டர் சுப்ரமணியம் அவ்வாறு விளக்கினார்.
இது குறித்து பொது மக்கள் மேலும் தகவல் அறிந்து கொள்ள :
- தங்களின் சமூக ஊடக கணக்கின் முகப்புப் படத்தை கருப்பு நிறமாக மாற்றுதல்
- ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள் குறித்த அண்மையத் தகவல்களை அறிந்து கொள்ள MMA SCHOMOS எனும் முகநூல் பக்கத்தை வலம் வருதல்
- ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 12 ஆம் நாள் வேலை இடங்களுக்கு கருப்பு நிற ஆடையை அணிந்து செல்லுதல்
- ஒப்பந்த அடிப்படையிலான சுகாதாரப் பணியாளர்களுக்குத் துணை நிற்போம் எனும் வாசகத்தை உட்படுத்தி சமூக ஊடகங்களில் தங்களின் படங்களைப் பகிர்தல். #saveMYcontractHCW #BlackMondayMY #CodeBlackMY எனும் குறிச் சொற்களாஇ மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மலேசியாவில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான சுகாதாரப் பணியாளர்களின் சிரமத்தை அணுசரிக்கும் வகையிலும் நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்று பணி புரியும் இளம் திறமையாளர்களுக்காகவும் கருப்பு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 23,077 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றா வேளையில் 789 பேருக்கு மட்டுமே அரசாங்க ஊழியராக நிரந்தரப் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காண்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒப்பந்த அடிப்ப்படையிலான மருத்துவ பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஊக்குவிக்கின்றோம் என டாக்டர் சுப்ரமணியம் மேலும் கூறினார்.

