Site icon அநேகன்

8% மலேசியர்கள் தடுப்பூசியை முழுமை செய்துள்ளனர் !

கோலாலம்பூர் | 5/7/2021 :-

மலேசியர்களில் 2,618,316 பேர், அதாவது 8 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுவிட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
இம்மாத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு இரு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டிருப்பதை இலாக்காகக் கொண்டுள்ளது,
இதுவரையில் 9,006,715 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் 2,618,316 பேருக்கு இரண்டாம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
அன்றாடத் தடுப்பூசி அறிக்கையின்படி, நேற்று 206,015 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் 78,630 இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என டாக்டர் அடாம் பாபா தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version