கோலாலம்பூர் | 6/7/2021 :-
கோலாலம்பூர் மருத்துவமனையின் உளவியல் சிகிச்சை ஆண்கள் பிரிவில் 10 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்பொழுது முடக்கப்பட்டுள்ள கோலாலம்பூர் மருத்துவமனையின் உளவியல் சிகிச்சை ஆண்கள் பிரிவில் முன்னரே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அங்கேயே சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிய கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டாலும் கோலாலம்பூர் மருத்துவமனையின் எந்த வார்டும் மூடப்படாது என டாக்டர் அடாம் பாபா கூறினார்.
பாதிக்கப்பட்ட வார்டுகளையோ அல்லது பிரிவையோ முழுதாக முடப்படுவது வழக்கம். தற்பொழுது முடக்கம் கண்டுள்ள அந்தப் பிரிவில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அப்பிரிவில் உள்ள நோயாளிகளையும் அவர்களுக்கு நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்கவும் அப்பிரிவு தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது.
அப்பிரிவு இரண்டு நாள் முடக்கத்திற்குப் பிறகு பரிசோதனை முடிவுகள் தெரியவரும்.
இதனிடையே, கோலாலம்பூர் மருத்துவமனை வழக்கம் போல் செயல்படும் என டாக்டர் அடாம் பாபா வலியுறுத்தித் தெரிவித்துக் கொண்டார்.
சம்பந்தப்பட்டப் பிரிவுகள் இனி புதிதாக அனுமதிக்கப்படும் நோயாளிகள் தொற்று பரவாதப் புதிய வார்டுகளுக்கு அனுப்பப்படுவர்.
கோலாலம்பூர் மருத்துவமனையின் உளவியல் சிகிச்சை ஆண்கள் பிரிவில் 8 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை அப்பிரிவு முடக்கம் செய்யப்பட்டது.
அப்பிரிவில் கடந்த 1ஆம் தேதி புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு கோவிட்-19 தொற்று காண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் சில ஊழியர்கள் நெருங்கியத் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என டாக்டர் அடாம் பாபா மேலும் சொன்னார்.

