Site icon அநேகன்

நாடாளுமன்றக் கூட்டம் : மக்கள் பிரச்சனையை விவாதிக்கும் களமாக இருக்க வேண்டும்; அமைச்சர்களின் விரிவுரைக் கூட்டமாக இருக்கக் கூடாது !

கோலாலம்பூர் | 7/7/2021

எதிர்வரும் 26/7/2021 ஆம் நாள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. அது மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக இல்லாமல் அமைச்சர்களின் விரிவுரைகளை கேட்கும் மன்றமாக அமையக் கூடாது என நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

பிகேஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம், அமானா கட்சியின் தலைவர் முகம்மட் சாபு, ஜ.செ.க. கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றக் கூட்டம் 5 நாட்களாகாக் குறைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினர்.

நாடாளுமன்ற அமர்வில் மக்கள் பிரச்சனையை விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், அந்த நாடாளுமன்ற அமர்வே வீண்.

நாடாளுமன்றம் என்பது மக்கள் குறைகளை கேட்கப்படவும், பிரச்சனைகளை ஆராயவும் மக்கள் எதிர்ப்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாடு எதிர்நோக்கி இருக்கும் சிக்கலைக் கையாள நிரந்தரத் தீர்வவை நோக்கி நகரும் களமாக இருக்க வேண்டும்.

முன்னதாக, வெறும் 5 நாட்களாக குறைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை விவாதிக்க முடியாமல் போய்விடுமோ என வருத்தம் கொண்டுள்ளனர்.

எனவே, மக்கள் எதிர்நோக்கியிருக்கும் சுலாதாரம் – பொருளாதாரம் குறித்த சிக்கல்களைக் கையாளும் முறைகளை உருவாக்குவதில் அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்தக் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, நீதியும் நேர்மையும் கொண்ட சிறப்பு நாடாளுமன்ற அமர்வை எதிர்க்கட்சி கோரும் அளவுக்கு இருக்க வேண்டாம்.

கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் அனைவரும் ஒன்று பட வேண்டுமே அன்றி அரசியல் நோக்கத்திற்காகவும் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் செயல்படக் கூடாத என நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

Exit mobile version