Site icon அநேகன்

5 நாள் நாடாளுமன்ற அமர்வு : விவாதங்கள் இருக்கும் ! – மார்ஸூக்கி

கோலாலம்பூர் | 7/7/2021 :-

எதிர்வரும் 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதங்களும் வாக்களிப்பும் இருக்கும் என பிரதமரின் அதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தின் எந்த விவகாரம் குறித்து விவாதங்கள் செய்யப்படும் என பிரதமரின் தலைமைச் செயலாளர் மார்ஸூக்கி முகம்மட் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டம் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கும் மேடையாக இல்லாமல் அமைச்சர்களின் விரிவுரைகளை கேட்கும் மன்றமாக அமையக் கூடாது என நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தின் நிரல் குறித்து பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பார் என மார்ஸூக்கி கூறினார்.

மேலும், அந்த 5 அமர்வுக்கு நாடாளுமன்ற சிறப்பு செயற்குழு அனுமதித்துள்ளது என அவர் சொன்னார்.

Exit mobile version