Site icon அநேகன்

பெஜுவாங் கட்சி பதிவு பெற்றது !

கோலாலம்பூர் | 8/7/2021 :-

பெஜுவாங் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பதிவு பெற்றதாக அதன் அதலைவர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்தார்,

அக்கட்சியின் பதிவு நிறைவடைந்ததை ஒட்டி அரசாங்கத்திற்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.

கட்சி பதிவு பெற்று விட்டது. எனவே, பெஜுவாங் கட்சியில் இணைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள். இதற்குப் பிறகு நாம் மிகவும் உற்சாகமாகச் செயல்படுவோம் என டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பெஜுவாங் கட்சி பதிவு குறித்து சங்கப்பதிவிலாக கண்டுகொள்ளவில்லை. இருந்த போதிலும், நீதிமன்றம் வாயிலாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.

கடந்த 25/6/2021 ஆம் நாள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உள்துறை அமைச்சை 14 நாட்களில் பெஜுவாங் கட்சியின் பதிவை நிறைவு செய்ய ஆணையிட்டது.

நீதிமன்றம் வழங்கிய 14 நாட்கள் கெடுவில் இன்றே இறுதி நாள்.

சங்கப்பதிவகத்தின் இயக்குநரும் உள்துறை அமைச்சரும் பெஜுவாங் கட்சியின் பதிவை அங்கீகரித்துள்ளனர்.

துன் மகாதீர் உட்பட பெஜூவாங் கட்சி தற்போது நான்கு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மூடா கட்சியும் தனது பதிவை விரைந்து அங்கீகரிக்க வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version