ஷா ஆலாம் | 9/7/2021 :-
சிலாங்கூர் மாநிலத்தின் கடுமையாக்கட்டப்ப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப் பகுதிகளில் பொருளாதாரத் துறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என முதல்வர் அமிருடின் ஷாரி பரிந்துரைத்துள்ளார்.
நேற்று நடந்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தில் அந்தப் பரிந்துரை முன்மொழியப்பட்டதாக அவர் கூறினார்
கோவிட்-19 தொடர் சங்கிலியை அறுப்பதற்கும் நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் சிலாங்கூர் மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு பார்க்கிறது.
எனவே, உண்மையாகவே தேவைப்படும் துறைகளைத் தவிர்த்து விட்டு மற்றத் துறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். அதனை தேசியப் பாதுகாப்பு மன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், அதிகமான ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டால் அவர்களைச் சார்ந்த பல துறைகள் மீண்டும் இயங்க வழி வகுக்கும் என அமிருடின் ஷாரி கூறினார்.

