சென்னை | 9/7/2021 :-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 19ஆம் தேதி அமெரிக்கா விரைந்தார்.
நடிகர் இரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் கோவிட்-19 பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் அமெரிக்கா செல்லவில்லை.
இந்த நிலையில், கடந்த 19/6/2021 ஆம் தேதி அமெரிக்கா விரைந்த இரஜினிகாந்த், அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார்.
அதன் பிறகு, அமெரிக்காவிலேயே தங்கி ஓய்வெடுத்துவந்த இரஜினிகாந்த், இன்று (09.07.2021) அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
நடிகர் இரஜினிகாந்த் சென்னை திரும்பும் தகவலறிந்து விமான நிலையத்தில் திரண்ட இரசிகர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

