Site icon அநேகன்

துணைப் பிரதமராகப் பணியைத் தொடங்கினார் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் !

புத்ராஜெயா | 9/7/2021 :-

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று புத்ராஜெயாவில் துணைப் பிரதமராகத் தமது பணியைத் தொடங்கினார்.

காலை 10.00 மணியளவில் பெர்டானா புத்ராவுக்கு வந்த டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியை நாட்டின் தலைமைச் செயலாளர் தான் ஶ்ரீ முகம்மட் ஸூக்கி அலி, பிரதமர் துறையின் துணைச் செயலாளர் டத்தோ ஜமில் ராக்கோன் ஆகியோர் வரவேற்றனர்.

கடந்த புதன் கிழமை பிரதமர் மகியாதின் முகம்மது யாசின் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை துணைப் பிரதமராக நியமித்தார்.

நான்காவது மாடியில் தமது அலுவலகத்தில் பணீயைத் தொடங்கிய டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி, இயங்கலை வாயிலாக தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஊரடங்கு தொடர்பான சந்திப்புக் கூட்டத்தில் பிரதமருடன் கலந்து கொண்டார்.

Exit mobile version