Site icon அநேகன்

கோவிட்-19: மலேசிய வரலாற்றில் இன்று மிக அதிகமான நேர்வுகள் ! 77 பேர் மரணம் !

புத்ராஜெயா | 9/7/2021 :-

மலேசியாவில் இன்று 9,180 பேருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 817,838-ஐ எட்டியுள்ளது.

இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 77 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 5,980 ஆக உயர்ந்துள்ளது.

தற்பொழுது 959 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 465 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 5,713 பேர் குணமடைந்துள்ள வேளையில் 731,193 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

Exit mobile version