புத்ராஜெயா | 10/7/2021 :-
கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் “ பரிவுமிக்க மலேசியா” எனும் கருப்பொருள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எதே வேளையில், கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் மிதமான முறையில் கொண்டாடப் படும் என தொடர்பு – பல்லூடகத் துறை அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்கவிடும் தொடக்க விழா, தேசிய நாள் கொண்டாட்டம், மலேசிய நாள் கொண்டாட்டம் ஆகிய மூன்றூ முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
வழக்கமாக ஜூலை மாத மத்தியில் ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியைப் பறக்கவிடும் விழா தொடங்கும். ஆனால், தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அது அடுத்த மாதம் முதல் வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவ்விழா கோலா திரங்கானுவில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்தால் அவ்விழா புத்ராஜெயாவில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் உள்ள டத்தாரான் பாஹ்லாவான் எனும் இடத்தில் தேசிய நாள் கொண்டாட்டத்தையும் சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் மலேசிய நாள் கொண்டாட்டத்தையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என சைஃபுடின் குறிப்பிட்டார்.
விழாக்கள் தொடர்பான பல முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இறுதி நேரத்தின் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவ்விழாக்களில் கலந்து கொள்வோர் குறித்து முடிவு செய்யப்படும் என அவர் மேகும் சொன்னார்.

