Site icon அநேகன்

மாவட்ட மருத்துவமனைகள் முழுமையான கோவிட்-19 அல்லாத மருத்துவமனையாக செயல்பட முடியாது !

மலாக்கா | 10/7/2021 :-

இம்மாநிலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க படுக்கைகளின் எண்ணிக்கை போதவில்லை என மாநில சுகாதாரம் – போதைப்பொருள் தடுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இரஹ்மாட் மரிமான் தெரிவித்துள்ளார்.

ஜாசின், ஆலோர் காஜா ஆகிய இரு மாவட்ட மருத்துவமனைகள் தலா 80 முதல் 100 படுக்கைகள் கொண்டுள்ளன. எனவே, அந்த மருத்துவமனைகளுக்கு மலாக்கா பொது மருத்துவமனையில் இருந்து கோவிட்-19 அல்லாத நோயாளிகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது என அவர் கூறினார்.

அவ்விரண்டு மாவட்ட மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குறாஐயவில்லை எனவும் மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கையில் 10 படுக்கைகள் கோவிட்-19 நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையால், கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க (தற்காலிக) கள மருத்துவமனையின் தேவை உள்ளது.

தற்போது மலாக்கா பொது மருத்துவமனையில் 91 விழுக்காடு படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளது என இரஹ்மாட் கூறினார்.

Exit mobile version