Site icon அநேகன்

அனைத்துலகப் புத்தக விமர்சன போட்டி: சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இரு மாணவர்கள் சாதனை !

கூலிம் | 10/7/2021 :-

Talent Development Society ஏற்பாடு செய்த அனைத்துலக புத்தக விமர்சன போட்டியில் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் வாகை சூடினர்.

பல நாடுகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி சஞ்சனா சிவகுரு தேசிய நிலையில் 3ஆம் நிலையும் மாணவன் உத்தவா தேவராஜு 6ஆம் நிலையும் பெற்றனர்.

இம்மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து பங்கெடுக்கச் செய்தவர் ஆசிரியர் திருமதி மல்லிகா ஆவார்.

பல நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவி சஞ்சனா சிவகுரு அனைத்துலக நிலையில் 7ஆம் நிலை வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version