கோலாலம்பூர் | 11/7/2021 :-
செலாயாங் மருத்துவமனை
மற்ற மருத்துவமனைகளில் இருந்து வரும் நோயாளிகளால் இடப்பற்றாக்குறை இங்கு ஏற்படுகிறது. இருந்தாலும், இம்மருத்துவமனையின் பல வார்டுகள் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதனால், நோயாளிகள் சிகிச்சைக்காகல் காத்திருக்கும் நேர அவகாசம் அதிகமாகியுள்ளது.
உயிர்வளி முனையத்தை ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், ஒருவர் ஒரு முனையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உயிர்வளியும் கட்டில்களும் இங்கு போதவில்லை. எனவே, எங்களால் என்ன முடியுமோ அதனை நாங்கள் செய்து வருகிறோம். இது நெறிமுறை மீறல் என்றாலும் நிலைமை மிக மோசமாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.
எதுவுமே செய்யாமல் இருப்பதை விட நிலைமையைக் கையாள என்னவெல்லாம் முடியுமா அத்தனை நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. இல்லையென்றால், இந்தியாவில் நடந்தது போல் இங்கும் மோசமாகி விடும்.
ஒரு முறை அவசர சிகிச்சைப் பிரிவின் ஒப்பந்த அடிப்படையிலான தாதியர் – மருத்துவப் பணியாளர் வேலை நிறுத்தம் செய்தபோது, மருத்துவர்களே அனைத்துப் பணிகளையும் தங்களின் பணிகளோடு சேர்த்து செய்ய வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள். மிகவும் கடினமானக் காலக்கட்டம் அது.
ஊதியத்திற்காக அவர்கள் போராடினார்கள். அதிகமானப் பணிகளைச் செய்ய வேண்டும். அதிலும் முறையாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும். இருந்தும் வேலை குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லாத நிலை நேரும்போது சோர்வை முழுதாய் ஆட்டிப்படைக்கும். கடைசி சொட்டு இரத்தம் அவரை பிழிந்தெடுத்தது போல் உணரப்படும்.
கோவிட்-19 தொற்று கண்டிருந்தவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்ததால் சில முறை தனிமைப்படுத்தலுக்கு இலக்கான மருத்துவ – முன்களப் பணியாளர்களுக்கு அது மட்டுமே ஓய்வாக அமைந்தது. அது உடம்பிற்கு வேண்டுமானால் ஓய்வாக அமையலாம்.
முழுமையான ஓய்வாக இருக்காது. அக்காலக் கட்டத்தில் அவர்கள் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்கவோ அல்லது இதர நடவடிக்கையில் ஈடுபடவோ முடியாது.
எனவே, பரிசோதனை முடிவுக்குக் காத்திருப்பதோடு, நிலைமை சரியான பிறகு மீண்டும் பணியிடத்திற்குத் திரும்ப வேண்டும்.
பகுதி 1க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48271
பகுதி 2க்கு இங்கே சொடுக்கவும்.
http://www.anegun.com/?p=48279

