Site icon அநேகன்

சுங்கை பூலோ மருத்துவமனையில் கற்பிணிப் பெண்களை உட்படுத்திய கோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பு !

சுங்கை பூலோ | 11/7/2021 :-

கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்து சுங்கை பூலோ மருத்துவமனையில் கற்பிணிப் பெண்களை உட்படுத்திய கோவிட்-19 5 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 பொதுச் சுகாதாரத் துறையைச் சம்பந்தப்பட்ட நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி, கடந்த மே மாதம் முதலே கற்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 திற்று கண்டிருப்பது அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இருவரும் இம்மாதம் 8ஆம் நாள் மூவரும் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். அவர்களீல் மிகவும் இளமையானவர் 25 வயது கொண்டவராவார்.

ஐன்ட்ன ஐவரில் நான்கு பெண்களின் குழந்தைகள் அறுவை சிகிச்சை வழி குறைமாதக் குழந்தைகளாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எஞ்சிய ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போதே மயக்க நிலையில் இருந்தார் எனவும் அவரது குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத் துறை ஊழியர் தெரிவித்தார்.

கடந்த மாதம் முழுவதும் இம்மருத்துவமனையில் 100 கற்பிணிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளது.

இம்மாதம் தற்போது 120 கற்பிணிகள் முதலாம் பிரிவு முதல் ஐந்தாம் பிரிவு வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் ஏறத்தாழ 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அறியப்படுகிறது.

கோவிட்-19 முதலாம் இரண்டாம் நிலை நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்படாது அல்லது சொற்ப அறிகுறிகள் மட்டுமே இருக்கும். ஆனால், மூன்றாம் நிலை கோவிட்-19 நோயாளிகளுக்கு pneumonia கண்டறியப்பட்டாலும் சுவாசப் பிரச்சனை ஏதும் இருக்காது.

நான்காம் நிலை கோவிட்-19 நோயாளிக்கு உயிர்வளி உதவி தேவை. ஆனால், ஐந்தாம் நிலை நோயாளிகளுக்கு சுவாச உதவிக் கருவிகள் கண்டிப்பாகத் தேவை.

சுவாச உதவிக் கருவிகள் பொருத்தப்படும் நிலை ஏற்படும் போது கற்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையை வெளியில் எடுக்கப்படும்.

இது வரையில், கற்பிணிகளிடையே கோவிட்-19 தொற்றுப் பரவும் காரணம் கண்டறியப்படவில்லை.

இருந்த போதிலும், அவர்களின் கணவர், நெருங்கிய குடும்ப உறுப்பினர், ஒரே வீட்டில் தங்குகிற அல்லது வேலையிட நண்பர்கள் வாயிலாக தொற்றுப் பரவியிருக்கலாம் என மருத்துவர்களால் நம்பப்படுகிறது.

கற்பிணிப் பெண்கள் சுகாதாரப் பரிசோதனையைத் தவிர்த்து வேறு காரணங்களுக்காக வெளியில் செல்வது மிகக் குறைவு.

கோவிட்-19 நோயாளிகள் நிலைமை மிக வேகமாக மோசமடைகிறது

சுகாதார பிரச்சனை ஏற்படும் என்பதால் கோவிட்-19 தொற்று கண்டுள்ள அனைத்து கற்பிணிகளையும் உடனடியாக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

தேவை இருப்பின் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட முன்னுரிமை வழங்கப்படும்.

இருந்த போதிலும், சுங்கை பூலோ மருத்துவமனையில் தற்பொழுது நோயாளிகளால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிகரித்து வரும் புதிய கோவிட்-19 நேர்வுகளால் மருத்துவப் பணியாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

கற்பிணி பெண்களுக்கு நோய் தீவிரமடைவதும் மோசமடைவதும் மிக விரைவாக நடக்கிறது. இதனால் மருத்துவர்கள் மிகுந்த கலக்கத்திற்கு இலக்காகி இருக்கின்றனர்.

கோவிட்-19 மதிப்பீட்டு மையத்திலிருந்து முதலாம் இரண்டாம் நிலை கோவிட்-19 நோயாளிகளை சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இம்மருத்துவமனையின் வார்டில் அனுமதிக்கப்படும்போது அவர்கள் 3ஆம் 4ஆம் நிலைக்கு மோசமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கற்பிணி நோயாளிகள் கோவிட்-19 முதலாம் இரண்டாம் நிலையில் உள்ளவர்களையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள்.

மேலும், நேர்வுகள் அதிகரித்திருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட கற்பிணிப் பெண்கள் காத்திருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது.

கற்பிணிப் பெண்களுக்கு எப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் சில நேரங்களில் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழலில் இருப்பர்.

இதனிடையே, கற்பிணிப் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவும் நாட்டின் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் பரிந்துரைத்திருந்தார்.

கிருமித் தொற்று தற்போது சமூகத்தில் பரவியுள்ளது. எனவே, விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே இருக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறுகலான இடங்களையும் பொது இடங்களையும் தவித்திடவும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வும் டாக்டர் நோர் ஹிஷாம் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த 5ஆம் தேதி, நான்காம் கட்ட கோவிட்-19 தொற்று கண்டிருக்கும் கற்பிணி நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

மேலும், கற்பிணிப் பெண்கள் குறித்த தகவலை மிக விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கற்பிணிப் பெண்கள் குறித்த சிகிச்சைக்கு தனித்த நெறிமுறை அவசியம் என அவர் மேலும் சொன்னார்.

Exit mobile version